tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: இந்திய பல சமய மற்றும் கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைள் கொண்ட நாடாகும். இது இந்து, சமணம், புத்தம் மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு பெரும் சமயங்களின் பிறப்பிடமாகும். நமது நாட்டில் பல்வேறு சமயங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட சமயங்கள் நீண்டகாலமாக அமைதியுடன் வாழ்கின்றனர். நவீன தேசிய நாடுகள் அனைத்தும் பல சமயங்களைக் கொண்டிருப்பதால் அனைத்து சமயங்களையும் சகித்துக்கொள்ளும் தன்மை அவசியமானதாகும். சமயச்சார்பின்மையின் நோக்கமானது சமய நம்பிக்கை கொண்டவர்களும் மற்றும் எந்த சமயத்தையும் சாராதவர்களும் அமைதியுடன் இணக்கமாக வாழ்வதற்க சமூகத்தை உருவாக்குவது என்பதாகும். இராஜாராம் மோகன்ராய், சர் சையது அகமதுகான், இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் B.R. அம்பேத்கர் போன்ற குறிப்பிடத்தக்க பெரும் மரியாதைக்குரியதனிநபர்கள் இந்தியச் சமூகத்தின்பல்வேறு நிலைகளில் சமயச்சார்பின்மையை நிலைநாட்ட பங்களித்துள்ளனர். இந்தியா போன்ற பல்வேறு சமய பன்முகத் தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை என்பது மதிப்புமிக்க ஒன்றாகும். சமயச்சார்பின்மை என்ற சொல் லத்தீன் வார்த்தையான செகுலம் (saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் காலம் (an age) அல்லது உள்ளுணர்வு காலம் (the spirit of an age) ஆகும். ஆங்கிலேய பத்திரிக்கை எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் என்பவர் secularism என்ற பதத்தை உருவாக்கினார். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், பகுதி 2, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

சரியான கூற்றைத் தேர்ந்தெடு? [I] இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும். [II] சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. [III] அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது. [IV] அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.

 • Option 1: I மற்றும் III சரி
 • Option 2: I, II, IV சரி
 • Option 3: I, II, III சரி
 • Option 4: I மற்றும் II சரி
 • Answer: I, II, IV சரி

answer

I

question 2

கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம் , காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு .

 • Option 1: கூற்று சரி காரணம் தவறு
 • Option 2: கூற்று , காரணம் இரண்டும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது .
 • Option 3: கூற்று தவறு , காரணம் சரி
 • Option 4: கூற்று , காரணம் இரண்டும் சரி , காரணம் கூற்றை விளக்கவில்லை .
 • Answer: கூற்று , காரணம் இரண்டும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது .

answer

question 3

கூற்று : இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும் காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும் .

 • Option 1: கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது .
 • Option 2: கூற்று சரி , காரணம் கூற்றை விளக்கவில்லை .
 • Option 3: கூற்று தவறு , காரணம் சரி
 • Option 4: இரண்டும் தவறு
 • Answer: கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது .

answer

question 4

தவறான இணையைத் தேர்க

 • Option 1: தீன்இலாகி - ஒரு புத்தகம்
 • Option 2: கஜுராஹோ- இந்து கோவில்
 • Option 3: அசகோர் - பாறைக்கல்வெட்டு
 • Option 4: இக்பால் - கவிஞர்
 • Answer: தீன்இலாகி - ஒரு புத்தகம்

answer

question 5

பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் ........................காட்டுவதைத் தடை செய்கிறது.

 • Option 1: தீண்டாமை
 • Option 2: ஒற்றுமை
 • Option 3: பாகுபாடு
 • Option 4: அனைத்தும்
 • Answer: பாகுபாடு

answer

question 6

இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: தவறு

answer

question 7

சமயச்சார்பின்மைஎன்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: தவறு

answer

question 8

மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையைப் பின்பற்றினார்.

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: சரி

answer

question 9

சமண சமயம் சீனாவில் தோன்றியது .

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: தவறு

answer

question 10

இந்திய அரசாங்கம் அனைத்துச் சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது .

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: சரி

answer

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: குடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}