tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: ஒரு நாட்டின் அரசாங்கத்தைப் பற்றியும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் படிக்கும் இயல் குடிமையியல் ஆகும். குடிமகன் (Citizen) என்ற சொல் ‘சிவிஸ்’ (Civis) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் ‘குடியிருப்பாளர்’ என்பதாகும். நகர நாடுகள் அமைப்புகள் மறைந்த பின்னர் இச்சொல் நாடுகளின் உறுப்பினர்என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் குடிமக்கள் அனைத்து விதமான குடியியல், அரசியல் உரிமைகளை அனுபவிக்க தகுதி உடையவர்கள் ஆவர். குடிமகனும் குடியுரிமையும்: ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறைவேற்றுபவருமே அந்நாட்டின் குடிமகன் ஆவார். குடியுரிமை என்பது ஒரு குடிமகன் அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதலே ஆகும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?

  • Option 1: பிறப்பின் மூலம்
  • Option 2: சொத்துரிமை பெறுவதன் மூலம்
  • Option 3: வம்சாவழியின் மூலம்
  • Option 4: இயல்பு குடியுரிமைமூலம்

answer

சொத்துரிமை பெறுவதன் மூலம்

question 2

அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?

  • Option 1: பகுதி II
  • Option 2: பகுதி II பிரிவு 5 – 11
  • Option 3: பகுதி II பிரிவு 5 – 6
  • Option 4: பகுதி I பிரிவு 5 - 11

answer

பகுதி II பிரிவு 5 – 11

question 3

இந்தியாவின் முதல் குடிமகன் யார்?

  • Option 1: பிரதமர்
  • Option 2: குடியரசுத்தலைவர்
  • Option 3: முதலமைச்சர்
  • Option 4: இந்திய தலைமைநீதிபதி

answer

குடியரசுத்தலைவர்

question 4

அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

தவறு

question 5

வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

தவறு

question 6

அடிப்படை உரிமைகளை இந்தியக்குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

சரி

question 7

நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

தவறு

question 8

ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.

  • Option 1: I மற்றும் III சரி
  • Option 2: I, II, IV சரி
  • Option 3: I, II, III சரி
  • Option 4: I மற்றும் II சரி

answer

I மற்றும் III சரி

question 9

கூற்று: 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்தமக்கள் இந்திய குடிமக்களாயினர். காரணம்: 1955 இந்தியக்குடியுரிமைச்சட்டத்தின் படி பிரதேசங்களைஇணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்

  • Option 1: காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
  • Option 2: காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
  • Option 3: கூற்று தவறு ஆனால் காரணம் சரி
  • Option 4: காரணம், கூற்று இரண்டும் தவறு

answer

காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

question 10

ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை?

  • Option 1: அடிப்படை உரிமைகள்
  • Option 2: இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை
  • Option 3: மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • Option 4: அனைத்தும்

answer

அனைத்தும்

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும் பகுதி 2
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}