tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

குடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: நமது நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு என்ற இரண்டு வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் 28 மாநில அரசாங்கங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள தனக்கென ஒரு அரசைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலமும் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை கொண்டுள்ளது. மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையால் மேற்கொள்ளப்படுகிறது. மாநில ஆளுநர் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாக திகழ்கிறார். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, பகுதி 2, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

சரி

question 2

ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

தவறு

question 3

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

சரி

question 4

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர். i . குடியரசுத் தலைவர் ii . துணை குடியரசுத் தலைவர் iii . ராஜ்ய சபை உறுப்பினர்கள் iv . சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்

  • Option 1: i, ii & iii சரி
  • Option 2: i மற்றும் iii சரி
  • Option 3: i, iii மற்றும் iv சரி
  • Option 4: i, ii, iii மற்றும் iv சரி

answer

i, iii மற்றும் iv சரி

question 5

ஒரு சட்டமன்ற தொகுதி ---அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும்.

  • Option 1: ஒரு லட்சம்
  • Option 2: ஐம்பதாயிரம்
  • Option 3: இரண்டு லட்சம்
  • Option 4: ஐந்து லட்சம்

answer

ஒரு லட்சம்

question 6

பொருந்தாத ஒன்றைக் கண்டறியவும்?

  • Option 1: ஆளுநர் - பெயரளவுத் தலைவர்
  • Option 2: முதலமைச்சர் - மாற்று தலைவர்
  • Option 3: சட்டமன்ற பேரவை - கீழவை
  • Option 4: சட்டமன்ற மேலவை - மேலவை

answer

முதலமைச்சர் - மாற்று தலைவர்

question 7

_____பதவி விலகல் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகலை குறிக்கும்.

  • Option 1: ஆளுநர்
  • Option 2: துணை ஆளுநர்
  • Option 3: முதலமைச்சர்
  • Option 4: துணை முதலமைச்சர்

answer

முதலமைச்சர்

question 8

முதலமைச்சர் பதவி ஏற்கும் பொழுது உறுப்பினராக இல்லாத பட்சத்தில் ----மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

  • Option 1: எட்டு
  • Option 2: மூன்று
  • Option 3: பன்னிரண்டு
  • Option 4: ஆறு

answer

ஆறு

question 9

மாநிலத்தில் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்கலை கட்டுப்படுத்துவது எது?

  • Option 1: மாவட்ட நீதிமன்றம்
  • Option 2: உயர்நீதிமன்றம்
  • Option 3: உச்சநீதிமன்றம்
  • Option 4: வட்டார நீதிமன்றம்

answer

உயர்நீதிமன்றம்

question 10

சட்டமன்றம் ஆண்டுக்கு எத்தனை முறை கூடும்?

  • Option 1: ஒரு முறை மட்டும்
  • Option 2: இரண்டு அல்லது மூன்று முறை
  • Option 3: நான்கு அல்லது ஐந்து முறை
  • Option 4: மூன்று அல்லது நான்கு முறை

answer

இரண்டு அல்லது மூன்று முறை

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}