tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

இந்திய பொருளாதார பரிணாம வளர்ச்சி, evolution of Indian economy part 1

முதலில், எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்! நாம் பொருளாதார பாடப்பகுதியில் உள்ள தலைப்புகளை, ஒன்றன்பின் ஒன்றாக, வரிசையாக, படித்துக் கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்பொழுது இந்திய பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி "evolution of Indian economy" என்ற பகுதியிலிருந்து, முக்கிய வினா விடைகளை படிக்க இருக்கிறோம். கீழே தரப்பட்டுள்ள அனைத்து கேள்விகளையும் படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இதை படித்து முடித்த கையுடன், இதற்கு முன்பு படித்த கேள்விகள் அனைத்தையும் ஒரு முறை மறுபார்வை பார்த்துவிடுங்கள். நமது தளத்தில் பயிற்சி எடுப்பதற்கான வசதி தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் Go to quiz என்ற லிங்க் தரப்பட்டிருக்கும். அதை சொடுக்குவதன் மூலமாக, நீங்கள் அந்த பாடத்தில் கொடுக்கப்பட்ட கேள்விகளை ஒருமுறை பயிற்சி செய்து, அதில் நீங்கள் எடுக்கும் உங்களுடைய மதிப்பெண்களை கூட தெரிந்து கொள்ளலாம்! படித்தால் மட்டும் போதாது, பயிற்சி முக்கியம்! முக்கியம்! முக்கியம்! என்பதை மறந்து விடாதீர்கள். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவோம். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

சுதந்திரத்திற்கு முன்பு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்க காரணம் யாது?

  • Option A: கல்வி அறிவின்மை
  • Option B: ஆங்கிலேயர்களின் பொருளாதார சுரண்டல்
  • Option C: போதிய விழிப்புணர்வின்மை
  • Option D: போதிய அளவு வளங்கள் இல்லாமை

answer

ஆங்கிலேயர்களின் பொருளாதார சுரண்டல்

question 2

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவில் கல்வி அறிவு சதவீதம்?

  • Option A: 17%
  • Option B: 18%
  • Option C: 19%
  • Option D: 21%

answer

17%

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    சுதந்திர இந்தியாவின் முதன்மை வளர்ச்சி துறை (prime growing sector) எது?

    • Option A: வேளாண்மை
    • Option B: போக்குவரத்து
    • Option C: தொழில் வளர்ச்சி
    • Option D: வர்த்தகம்

    answer

    தொழில் வளர்ச்சி

    question 4

    பொருளாதார புள்ளியியலாளர் ஆங்கஸ் மாடிஷனின் கூற்றுப்படி 1600 _ 1870 வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம்?

    • Option A: 0%
    • Option B: 10%
    • Option C: 15%
    • Option D: 20%

    answer

    0%

    question 5

    வேளாண்மை வளர்ச்சியை முதன்மையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியில் வெற்றி பெற்ற நாடு?

    • Option A: இந்தியா
    • Option B: இங்கிலாந்து
    • Option C: அமெரிக்கா
    • Option D: சீனா

    answer

    சீனா

    question 6

    வேளாண்மை துறை முதன்மை வளர்ச்சி துறையாக அமைய தேவையான காரணிகள்?

    • Option A: வேளாண்மைக்கு தேவையான வளங்கள்
    • Option B: வேளாண்மை செய்ய தேவையான மக்கள் சக்தி
    • Option C: இரண்டும்
    • Option D: இரண்டுமே அல்ல

    answer

    இரண்டும்

    question 7

    முதல் தேசிய திட்ட குழு நிறுவப்பட்ட ஆண்டு?

    • Option A: 1938
    • Option B: 1950
    • Option C: 1991
    • Option D: 1982

    answer

    1938

    question 8

    தொழில் துறையை முதன்மை வளர்ச்சி துறையாக தேர்ந்தெடுக்க காரணம்?

    • Option A: ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஆல்
    • Option B: IMF & உலக வங்கியின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஆல்
    • Option C: ஐக்கிய நாடுகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஆல்
    • Option D: மேற்கண்ட எதுவுமில்லை

    answer

    IMF & உலக வங்கியின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஆல்

    question 9

    எந்த ஐந்தாண்டு திட்டம் வேளாண்மையை முதன்மை வளர்ச்சி துறையாக அறிவித்தது?

    • Option A: எட்டாம் (1992)
    • Option B: ஒன்பதாம் (1997)
    • Option C: பத்தாம் (2002)
    • Option D: ஆறாம் (1980)

    answer

    பத்தாம் (2002)

    question 10

    வேளாண்மையை முதன்மை வளர்ச்சி துறையாக கொள்வதால் தீர்க்கப்படும் பிரச்சனைகள்?

    • Option A: உணவு பாதுகாப்பின்மை
    • Option B: வறுமை
    • Option C: பட்டினி
    • Option D: அனைத்தும்

    answer

    அனைத்தும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}