tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. -- புத்தர்

அலகு 8 - காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: பொதுவாக மனித சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. மக்கள் தொகையில் சரிபாதியாக பெண்கள் உள்ளனர். இதனால் பல்வேறு காலங்களில் பெண்களின் நிலையை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ளுதல் தவிர்க்க இயலாததாகிறுது. பெண்களின் நிலை அனைத்து காலகட்டங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. மேலும் வட்டார அளவிலும் கூட வேறுபட்டிருந்தன. பண்டைய இந்தியாவில் அதிலும் குறிப்பாக முந்தைய வேதகாலத்தில் பெண்கள் சமமான உரிமைகளை பெற்று மதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான வெளிநாட்டு படையெடுப்புகளின் விளைவாக சமூகத்தில் அவர்களின் நிலை மோசமடைந்தது.அவர்கள் அடக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். புதிய சமூக நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் சமூகத்திற்குள் நுழைந்து பெண்களின் சுதந்திரத்திற்குச் சில வரம்புகள் மற்றும் கட்டுபாடுகளை விதித்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் இஜோதிராவ் பூலே, பெரியார் ஈ.வெ.ரா.. டாக்டர் தர்மாம்பாள் போன்ற பல முக்கிய சமூக சமய சீர்திருத்தவாதிகள் பெண்களின் மேம்பாட்டிற்காக போராடினார். வித்யாசாகரின் அயராத முயற்சியால் விதவைப் பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதுடன் 1856இல் விதவை மறுமண சட்டம் கொண்டு வருவதற்கும் வழிவகுத்தது. பெண்கள் கல்வி கற்பதன் மூலமே சமூக தீமைகளை ஒழிக்க முடியும் என்பதைச் சீர்திருத்தவாதிகள் உணர்ந்தனர். ஆகையால் அவர்கள் பெண்களுக்கான பள்ளிகலை நாட்டின் பகுதிகளிலும் தொடங்கினார். அதுவே பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவந்தன. இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்கள் முக்கிய வகித்தனர். சுதந்திரம் பெறும்வரை பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளனர். பெண்கள் தற்பொழுது வாழ்க்கையின் ஒவ்வொரு துறைகளிலும் தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்துகின்றனர். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 8 - காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை பகுதி 2, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் ...............

 • Option A: தாதாபாய் நௌரோஜி
 • Option B: கோபால கிருஷ்ண கோகலே
 • Option C: வ. உ. சிதம்பரம்பிள்ளை
 • Option D: லாலா லஜபதி ராய்

answer

கோபால கிருஷ்ண கோகலே

question 2

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திரத்தவாதிகளில் ஒருவர்.............ஆவார்

 • Option A: ஈ. வெ. ராமசாமி
 • Option B: சுப்பிரமணிய பாரதியார்
 • Option C: திரு. வி. கலியாணசுந்தரனார்
 • Option D: வ. உ. சிதம்பரம்பிள்ளை

answer

ஈ. வெ. ராமசாமி

question 3

கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிகையின் பெயர்...........ஆகும்.

 • Option A: சித்தாந்த தீபிகா
 • Option B: பாரத மாதா
 • Option C: சுதந்திர இந்தியா
 • Option D: விவேக வர்தினி

answer

விவேக வர்தினி

question 4

பெண்களுக்கான 23 சாவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.

 • Option A: சரி
 • Option B: ___
 • Option C: தவறு
 • Option D: ___

answer

தவறு

question 5

1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது.

 • Option A: சரி
 • Option B: ___
 • Option C: தவறு
 • Option D: ___

answer

சரி

question 6

சரியான இணையை கண்டுபிடி

 • Option A: மகளிர் பல்கலைக்கழகம் - பேராசிரியர் கார்வே
 • Option B: நீதிபதி ரானடே - ஆரிய சமாஜம்
 • Option C: விதவை மறுமனச் - சட்டம் 1855
 • Option D: ராணி லட்சுமிபாய் - டெல்லி

answer

மகளிர் பல்கலைக்கழகம் - பேராசிரியர் கார்வே

question 7

மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி

 • Option A: குழந்தை திருமணம்
 • Option B: சதி
 • Option C: தேவதாசி முறை
 • Option D: விதவை மறுமணம்

answer

தேவதாசி முறை

question 8

1. பேசும் ஹஸ்ரத் மஹால்,ராணி லக்ஷ்மி பாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 2. தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார். மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது

 • Option A: 1 மட்டும்
 • Option B: 2 மட்டும்
 • Option C: 1 மற்றும் 2
 • Option D: இரண்டுமில்லை

answer

1 மற்றும் 2

question 9

கூற்று ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார். காரணம் இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்

 • Option A: கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.
 • Option B: கூற்று சரியானது.காரணம் தவறு.
 • Option C: கூற்று சரியானது.காரணம் கூற்றை விளக்குகிறது.
 • Option D: கூற்று சரி.காரணம் கூற்றை விளக்கவில்லை.

answer

கூற்று சரியானது.காரணம் கூற்றை விளக்குகிறது.

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 10

  தவறான இணையைக் கண்டறிக?

  • Option A: வரதட்சிணை - சமூக கொடுமை
  • Option B: சாரதா சதன் - பண்டித ராமாபாய்
  • Option C: வுட்ஸ் கல்வி அறிக்கை - 1853
  • Option D: பிரம்மஞான சபை - அன்னிபெசன்ட்

  answer

  வுட்ஸ் கல்வி அறிக்கை - 1853

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}