tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். -- ஸ்டீலி

அலகு 8 - காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: பொதுவாக மனித சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. மக்கள் தொகையில் சரிபாதியாக பெண்கள் உள்ளனர். இதனால் பல்வேறு காலங்களில் பெண்களின் நிலையை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ளுதல் தவிர்க்க இயலாததாகிறுது. பெண்களின் நிலை அனைத்து காலகட்டங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. மேலும் வட்டார அளவிலும் கூட வேறுபட்டிருந்தன. பண்டைய இந்தியாவில் அதிலும் குறிப்பாக முந்தைய வேதகாலத்தில் பெண்கள் சமமான உரிமைகளை பெற்று மதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான வெளிநாட்டு படையெடுப்புகளின் விளைவாக சமூகத்தில் அவர்களின் நிலை மோசமடைந்தது.அவர்கள் அடக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். புதிய சமூக நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் சமூகத்திற்குள் நுழைந்து பெண்களின் சுதந்திரத்திற்குச் சில வரம்புகள் மற்றும் கட்டுபாடுகளை விதித்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் இஜோதிராவ் பூலே, பெரியார் ஈ.வெ.ரா.. டாக்டர் தர்மாம்பாள் போன்ற பல முக்கிய சமூக சமய சீர்திருத்தவாதிகள் பெண்களின் மேம்பாட்டிற்காக போராடினார். வித்யாசாகரின் அயராத முயற்சியால் விதவைப் பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதுடன் 1856இல் விதவை மறுமண சட்டம் கொண்டு வருவதற்கும் வழிவகுத்தது. பெண்கள் கல்வி கற்பதன் மூலமே சமூக தீமைகளை ஒழிக்க முடியும் என்பதைச் சீர்திருத்தவாதிகள் உணர்ந்தனர். ஆகையால் அவர்கள் பெண்களுக்கான பள்ளிகலை நாட்டின் பகுதிகளிலும் தொடங்கினார். அதுவே பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவந்தன. இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்கள் முக்கிய வகித்தனர். சுதந்திரம் பெறும்வரை பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளனர். பெண்கள் தற்பொழுது வாழ்க்கையின் ஒவ்வொரு துறைகளிலும் தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்துகின்றனர். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 8 - காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை பகுதி 1, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

........... சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெயிப்படுத்தியும் நீக்கியம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது.

  • Option A: மனித
  • Option B: விலங்கு
  • Option C: காடு
  • Option D: இயற்கை

answer

மனித

question 2

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

  • Option A: தர்மாம்பாள்
  • Option B: முத்துலட்சுமி அம்மையார்
  • Option C: மூவலூர் ராமாமிர்தம்
  • Option D: பண்டித ரமாபாய்

answer

முத்துலட்சுமி அம்மையார்

question 3

சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு

  • Option A: 1827
  • Option B: 1828
  • Option C: 1829
  • Option D: 1830

answer

1829

question 4

B.M. மலபாரி என்பவர் ஒரு

  • Option A: ஆசிரியர்
  • Option B: மருத்துவர்
  • Option C: வழக்கறிஞர்
  • Option D: பத்திரிகையாளர்

answer

பத்திரிகையாளர்

question 5

பின்வருவனவற்றில் எவை எது சீர்திருத்த இயக்கம் ங்கள்

  • Option A: பிரம்ம சமாஜம்
  • Option B: பிரார்த்தனை சமாஜம்
  • Option C: ஆரிய சமாஜம்
  • Option D: மேற்கண்ட அனைத்தும்

answer

மேற்கண்ட அனைத்தும்

question 6

பெதுன் பள்ளி..............இல் J.E.D பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது.

  • Option A: 1848
  • Option B: 1849
  • Option C: 1850
  • Option D: 1851

answer

1849

question 7

1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது

  • Option A: வுட்ஸ்
  • Option B: வெல்பி
  • Option C: ஹண்டர்
  • Option D: முட்டிமன்

answer

ஹண்டர்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 8

    சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை என நிர்ணயித்தது.

    • Option A: 11
    • Option B: 12
    • Option C: 13
    • Option D: 14

    answer

    14

    question 9

    .............1819இல் கிறித்துவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது.

    • Option A: பெண் சிறார் சங்கம்
    • Option B: ஆண் சிறார் சங்கம்
    • Option C: மீன் பிடிப்போர் சங்கம்
    • Option D: தொழிலக உறுப்பினர்கள் சங்கம்

    answer

    பெண் சிறார் சங்கம்

    question 10

    சிவகங்கையை சேர்ந்த..............என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்.

    • Option A: தர்மாம்பாள்
    • Option B: வேலு நாச்சியார்
    • Option C: ஜான்சிராணி
    • Option D: திலகவதி

    answer

    வேலு நாச்சியார்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}