tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

அலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: ஆப்பிரிக்கா அமைவிடம் மற்றும் பரப்பளவு ஆப்பிரிக்கா, ஆசியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மற்றும் இரண்டாவது அதிக மக்கட் தொகையைக் கொண்ட கண்டமாகும். இது 37° 21 வடஅட்சம் முதல் 34° 51 தென்அட்சம் வரையிலும், 17° 33 மேற்கு தீர்க்கம் முதல் 51° 27 கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. இதன் பரப்பளவு சுமார் 30.36 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும்.( உலகின் மொத்த நிலப்பரப்பில் 20.2 சதவீதம்). புவிநடுக் கோடு ஆப்பிரிக்காவை இரு சம பாகங்களாகப் பிரிக்கிறது. கடகரேகை, புவி நடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற முக்கிய அட்சங்கள் கடந்து செல்லும் ஒரே கண்டம் இதுவாகும். இது வடக்கு தெற்காக 7623 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கு மேற்காக 7260 கிலோமீட்டர் நீளமும் உடையது. முதன்மை தீர்க்கரேகையான ( 0 ) ( Prime Meridian ) இக்கண்டத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள கானா நாட்டின் தலைநகரான அக்ராவின் அருகில் செல்கிறது. ஆப்பிரிக்க கண்டம் புவியின் நான்கு கோளங்களிலும் பரவியுள்ளது. சிறந்த கடற்பயண ஆய்வாளர்களான டேவிட் லிவிங்ஸ்டோன் மற்றும் எச்.எம் . ஸ்டான்லி ஆகியோர் இக்கண்டத்தின் உட்பகுதிகளை முதன்முதலில் ஆராய்ந்தவர்களாவர். ஆப்பிரிக்காவில் மனிதனின் மூதாதையர்கள் 5 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததாக ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. புவியில் மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்காவானது தாய் கண்டம் எனப் புனைப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, புவியியல் அலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, பகுதி 2, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை............

 • Option 1: கேப்பிளாங்கா
 • Option 2: அகுல்காஸ் முனை
 • Option 3: நன்னம்பிக்கை முனை
 • Option 4: கேப்டவுன்

answer

அகுல்காஸ் முனை

question 2

எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய்.................

 • Option 1: பனாமா கால்வாய்
 • Option 2: அஸ்வான் கால்வாய்
 • Option 3: சூயஸ் கால்வாய்
 • Option 4: ஆல்பர்ட் கால்வாய்

answer

சூயஸ் கால்வாய்

question 3

மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க. [i] சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர். [ii] கோடைக்காலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும். [iii] குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பத்துடனும் இருக்கும். [iv] சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.

 • Option 1: 1 மற்றும் 2 சரி
 • Option 2: 2 மற்றும் 4 சரி
 • Option 3: 2 மற்றும் 3 சரி
 • Option 4: 3 மற்றும் 4 சரி

answer

2 மற்றும் 4 சரி

question 4

ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர்

 • Option 1: பெரிய பிரிப்பு மலைத்தொடர்
 • Option 2: இமய மலைத்தொடர்
 • Option 3: பிளிண்டர்கள் மலைத்தொடர்
 • Option 4: மெக்டோனெல் மலைத்தொடர்

answer

பெரிய பிரிப்பு மலைத்தொடர்

question 5

கல்கூர்லி சுரங்கம் ................கனிமத்திற்குப் புகழ்பெற்றது.

 • Option 1: வைரம்
 • Option 2: பிளாட்டினம்
 • Option 3: வெள்ளி
 • Option 4: தங்கம்

answer

தங்கம்

question 6

ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம்................... .

 • Option 1: யூகிளிப்ஸ்
 • Option 2: சப்பாத்திகள்ளி
 • Option 3: ஜூஸ்ஸியு
 • Option 4: வெர்சாய்ஸ்

answer

யூகிளிப்ஸ்

question 7

ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள்............என அழைக்கப்படுகின்றன.

 • Option 1: கேப்பிளாங்கா
 • Option 2: டவுன்ஸ்
 • Option 3: கேப்டவுன்
 • Option 4: ஜூஸ்ஸியு

answer

டவுன்ஸ்

question 8

அண்டார்டிகாவில் நிறுவப்பட்டமுதல் இந்திய ஆய்வு நிலையம்.................

 • Option 1: தட்சின் கங்கோத்ரி
 • Option 2: வைனு பாப்பு ஆய்வக
 • Option 3: இமாத்ரி நிலையம்
 • Option 4: மெக்கில் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையம்

answer

தட்சின் கங்கோத்ரி

question 9

கூற்று : அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும் . காரணம் : அவை வளிமண்டலத்தின் மேலடுக்குக்காந்த புயலால் ஏற்படுகின்றன.

 • Option 1: கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.
 • Option 2: கூற்று மற்றும் காரணம் உண்மை கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல
 • Option 3: கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு
 • Option 4: காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு.

answer

கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.

question 10

கூற்று : ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும். காரணம் : புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு.

 • Option 1: கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.
 • Option 2: கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் கூற்றுகான காரணம் சரியான விளக்கம் அல்ல.
 • Option 3: கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
 • Option 4: காரணம் சரி ஆனால் கூற்று தவறு.

answer

கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: 8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

popular quizzes

{{message}}