tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. -- காந்தியடிகள்

அலகு 7 - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 8th social science part 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: நகரங்களின் பரிணாமம் (நகர்ப்புற குடியேற்றங்கள்) பல்வேறு வழிகளில், பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே நகரங்கள் செழித்து வளர்ந்தன. இந்தியாவில் உள்ள நகரங்களைப் பண்டைய கால நகரங்கள், இடைக்கால நகரங்கள் மற்றும் நவீன கால நகரங்கள் என வகைப்படுத்தலாம்.7.1 - பண்டைய கால நகரங்கள்பண்டைய காலங்களில் மன்னரின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றியதோடு, அவற்றின் அமைப்பு வர்த்தகத்திற்கு ஏற்றார்போல் கடல் மற்றும் ஆறுகளை அடைவதற்கு ஏற்றதாக இருந்தது. பெரும்பாலானவை நிர்வாக, சமய மற்றும் பண்பாட்டு மையங்களாக வளர்ந்தன. ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத் மற்றும் மதுரை ஆகியவை புகழ்பெற்ற பண்டைய கால நகரங்கள் ஆகும். இடைக்கால நகரங்க ள்இடைக்காலத்தில் பெரும்பாலான நகரங்கள் பிராந்திய மற்றும் மாகாணங்களில் தலைநகரங்களாக வளர்ந்தன. அவை கோட்டை நகரமாகவோ அல்லது துறைமுக நகரமாகவோ செயல்பட்டன. அவற்றில் முக்கியமானவை டெல்லி, ஹைதராபாத் ஜெய்பூர், லக்னோ, ஆக்ரா மற்றும் நாக்பூர்.நவீன கால நகரங்கள் ஐரோப்பியர்களின் வருகை நகரங்களில் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவர்கள முதலில் சூரத், டாமன், கோவா மற்றும் பாண்டிச்சேரி போன்ற சில கடலோர நகரங்களை உருவாக்கினர். இந்தியாவில் தங்களை நன்கு நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டிஷார் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்ற நகரங்களை நிர்வாகத் தலைநகராகவும் வணிக மையங்களாகவும் வளர்த்தனர். ஆளுமையின் பரப்பு விரிவடைய பல புதிய நகரங்களை அதன் அமைவிடத்திற்காகவும் தேவைக்காகவும் வளங்களுக்காகவும் உருவாக்கினர். புதியதாக வளர்ச்சிபெற நகரங்கள் மலை நகரங்கள் தொழில் நகரங்கள், நீதிமன்ற நகரங்கள், இருப்புப்பாதை நகரங்கள் இராணுவ குடியிருப்புகள் மற்றும் நிர்வாக நகரங்களாக விளங்கின. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 7 - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் பகுதி 2, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

--------இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.

  • Option A: 1639
  • Option B: 1635
  • Option C: 1637
  • Option D: 1638

answer

1639

question 2

இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

சரி

question 3

பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

சரி

question 4

புனித வில்லியம் கோட்¬ சென்னயில் அமைந்துள்ளது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

தவறு

question 5

குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

சரி

question 6

மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

தவறு

question 7

கூற்று இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது. காரணம் பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்தரிமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில் துறை புரட்சி இந்திய உள்நாட்ட தொழில்களை அழித்தன.

  • Option A: கூற்று சரி மற்றும் காரணம் தவறு
  • Option B: கூற்று தவறு மற்றும் காரணம் சரி
  • Option C: கூற்றுசரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
  • Option D: கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை.

answer

கூற்றுசரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 8

    பின்வரும் எந்த அறிக்கை உண்மையற்றவை?

    • Option A: ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசப்பட்டணத்தை மானியமாக வழங்கினார்.
    • Option B: டே மற்றும் கோகன் ஆகிய இரவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்
    • Option C: 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
    • Option D: இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் ரிப்பன் பிரபு.

    answer

    ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசப்பட்டணத்தை மானியமாக வழங்கினார்.

    question 9

    கூற்று ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர். காரணம் அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்

    • Option A: கூற்று சரி மற்றும் காரணம் தவறு
    • Option B: கூற்று தவறு மற்றும் காரணம் சரி
    • Option C: கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
    • Option D: கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

    answer

    கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

    question 10

    சரியாக பொருந்தாதவற்றை கண்டறிக?

    • Option A: பம்பாய் - ஏழு தீவுகள்
    • Option B: ராணுவக் குடியிருப்புகள் - கான்பூர்
    • Option C: மதுரை - பண்டைய நகரம்
    • Option D: கேதார்நாத் - வர்த்தக மையம்

    answer

    கேதார்நாத் - வர்த்தக மையம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}