tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம். -- சிம்மன்ஸ்

அலகு 7 - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 8th social science part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: நகரங்களின் பரிணாமம் (நகர்ப்புற குடியேற்றங்கள்) பல்வேறு வழிகளில், பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே நகரங்கள் செழித்து வளர்ந்தன. இந்தியாவில் உள்ள நகரங்களைப் பண்டைய கால நகரங்கள், இடைக்கால நகரங்கள் மற்றும் நவீன கால நகரங்கள் என வகைப்படுத்தலாம்.7.1 - பண்டைய கால நகரங்கள்பண்டைய காலங்களில் மன்னரின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றியதோடு, அவற்றின் அமைப்பு வர்த்தகத்திற்கு ஏற்றார்போல் கடல் மற்றும் ஆறுகளை அடைவதற்கு ஏற்றதாக இருந்தது. பெரும்பாலானவை நிர்வாக, சமய மற்றும் பண்பாட்டு மையங்களாக வளர்ந்தன. ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத் மற்றும் மதுரை ஆகியவை புகழ்பெற்ற பண்டைய கால நகரங்கள் ஆகும். இடைக்கால நகரங்க ள்இடைக்காலத்தில் பெரும்பாலான நகரங்கள் பிராந்திய மற்றும் மாகாணங்களில் தலைநகரங்களாக வளர்ந்தன. அவை கோட்டை நகரமாகவோ அல்லது துறைமுக நகரமாகவோ செயல்பட்டன. அவற்றில் முக்கியமானவை டெல்லி, ஹைதராபாத் ஜெய்பூர், லக்னோ, ஆக்ரா மற்றும் நாக்பூர்.நவீன கால நகரங்கள் ஐரோப்பியர்களின் வருகை நகரங்களில் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவர்கள முதலில் சூரத், டாமன், கோவா மற்றும் பாண்டிச்சேரி போன்ற சில கடலோர நகரங்களை உருவாக்கினர். இந்தியாவில் தங்களை நன்கு நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டிஷார் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்ற நகரங்களை நிர்வாகத் தலைநகராகவும் வணிக மையங்களாகவும் வளர்த்தனர். ஆளுமையின் பரப்பு விரிவடைய பல புதிய நகரங்களை அதன் அமைவிடத்திற்காகவும் தேவைக்காகவும் வளங்களுக்காகவும் உருவாக்கினர். புதியதாக வளர்ச்சிபெற நகரங்கள் மலை நகரங்கள் தொழில் நகரங்கள், நீதிமன்ற நகரங்கள், இருப்புப்பாதை நகரங்கள் இராணுவ குடியிருப்புகள் மற்றும் நிர்வாக நகரங்களாக விளங்கின. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 7 - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் பகுதி 1, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

பழங்கால நகரங்கள் எனப்படுவது

  • Option A: ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
  • Option B: டெல்லி மற்றும் ஹைதராபாத்
  • Option C: பம்பாய் மற்றும் கல்கத்தா
  • Option D: மேற்கண்ட எதுவுமில்லை.

answer

ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

question 2

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் நகரங்கள்

  • Option A: சூரத்
  • Option B: கோவா
  • Option C: பம்பாய்
  • Option D: மேற்கண்டஅனைத்தும்

answer

மேற்கண்டஅனைத்தும்

question 3

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை

  • Option A: சூயல் கால்வாய் திறப்பு
  • Option B: நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
  • Option C: ரயில்வே கட்டுமானம்
  • Option D: மேற்கண்ட அனைத்தும்

answer

மேற்கண்ட அனைத்தும்

question 4

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது.

  • Option A: வர்த்தகத்திற்காக
  • Option B: தங்கள்சமயத்தை பரப்புவதற்காக
  • Option C: பணிபுரிவதற்காக
  • Option D: ஆட்சி செய்வதற்காக

answer

வர்த்தகத்திற்காக

question 5

புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்

  • Option A: பம்பாய்
  • Option B: கடலூர்
  • Option C: மதராஸ்
  • Option D: கல்கத்தா

answer

மதராஸ்

question 6

1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?

  • Option A: புனித வில்லியம் கோட்டை
  • Option B: புனித டேவிட் கோட்டை
  • Option C: புனித ஜார்ஜ் கோட்டை
  • Option D: இவற்றில் எதுவுமில்லை

answer

புனித ஜார்ஜ் கோட்டை

question 7

இந்தியாவில் இருப்புப் பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-----

  • Option A: 1866
  • Option B: 1853
  • Option C: 1847
  • Option D: 1873

answer

1853

question 8

இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர்-------

  • Option A: வெல்லஸ்லி பிரபு
  • Option B: வில்லியம் பென்டிங்கு பிரபு
  • Option C: ரிப்பன் பிரபு
  • Option D: கானிங் பிரபு

answer

ரிப்பன் பிரபு

question 9

1919ஆம் ஆண்டு இந்தய அரசு சட்டம் மாகாணங்களில் --------அறிமுகப்படுத்தியது.

  • Option A: இரட்டை ஆட்சி
  • Option B: ஒற்றையாட்சி
  • Option C: கூட்டாட்சி
  • Option D: மேற்கண்ட எதுவுமில்லை

answer

இரட்டை ஆட்சி

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 10

    நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர்--------

    • Option A: ஜான் லாரன்ஸ்
    • Option B: வில்லியம் டென்னிசன்
    • Option C: தாமஸ் பாரிங் நார்த் புரூக்
    • Option D: சர்ஜோசியா சைல்டு

    answer

    சர்ஜோசியா சைல்டு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}