
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: அன்பு மற்றும் கபிலன் இருவரும் உங்களைப் போன்றே எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். ஒருநாள் பள்ளியில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மழை பெய்யத் துவங்கியது. அவர்கள் தங்கள் வகுப்பறையை நோக்கி ஓடஆரம்பித்தனர். மழையினால் அன்பு அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழ் தங்க திட்டமிட்டு கபிலனைஅழைத்தான். ஆனால் கபிலன் மரத்தை மின்னல் தாக்கக்கூடும் என வரமறுத்தான். கடைசியில் இருவரும் அவர்கள் வகுப்பறையை அடைந்தனர். வகுப்பறையில் ஒரு புதிய பருத்தியினாலான துவாளையைக் கண்டனர். அவர்கள் இருவரும் தங்களுடைய தலையைப் பருத்தியினாலான துவாளையைக் கொண்டு துடைத்து கொண்டனர். வகுப்பறையில் இருந்த மற்றமாணவர்கள் ஆசிரியர் கொண்டு வந்த துவாளையை நீங்கள் இருவரும் ஈரமாக்கி விட்டீர்கள் என்றனர். எனவே ஆசிரியர் தங்களைத் கண்டிக்ககூடும் என நினைத்து ஆசிரியரைத் திருப்திபடுத்தும் பொருட்டு கபிலன் ஆசிரியரிடம் சில கேள்விகளைக் கேட்டான். மேடம், இந்த துவாளை மிகவும் அழகாகவும் வண்ணமயமாகவும் இருக்கிறது. இதை எங்கிருந்து வாங்கினீர்கள்? இது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? என ஆசிரியரிடம் கேட்க, ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியாக இவை எவ்வாறு மூலப்பொருட்களைக் கொண்டு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என்பதை விளக்கத் தொடங்கினார். தொழிற்சாலை: மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்த கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடமே தொழிற்சாலை எனப்படும் . பல்வேறு மூலப் பொருட்களை நேரடியாக மனிதர்களால் நுகர்வு செய்ய இயலாது. எனவே மூலப் பொருட்களை நுகர்வு பொருட்களாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது மூலப்பொருட்களை ஒரு வடிவத்திலிருந்து நுகரும் வகையில் மற்றொரு வடிவத்திற்கு மாற்றுவதே உற்பத்தி தொழிற்சாலையின் சாராம்சம் ஆகும். தொழிற்சாலைகள், பொருளாதார நடவடிக்கையின் இரண்டாம் நிலை துறையாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மேம்பாடு மனி்தனுக்கு மூலப்பொருட்களைப் பயன்படும் பொருட்களாக உருவாக்க உ்தவுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எப்பொழுதும் உற்பத்தி தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் அளவிடப்படுகிறது. எனவே உலகில் உள்ள எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தொழிலகங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு மேம்பாடு அடைகிறது. பொருளாதார செயல்பாடுஉற்பத்தி, விநோயகம், நுகர்வு அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே பொருளாதார நடவடிக்கையாகும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, புவியியல் அலகு 6 - தொழிலகங்கள், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set
பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் பிரிவுகளின் கீழ் வருகின்றன.
�
உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் ----வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.