tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

அலகு 6 - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 8th social science பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நாம் தொடர்ச்சியாக தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து வினா விடைகளை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்பொழுது எட்டாம் வகுப்பு அலகு 6 - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி பாடத்திலிருந்து கேள்வி பதில்களை பார்க்க இருக்கிறோம். முழுமையாக படித்துவிட்டு, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 6 - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி பகுதி 2, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

சரி

question 2

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

சரி

question 3

நவீன முறையில் முதன் முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

தவறு

question 4

1948ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

சரி

question 5

பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிகு சான்றாக உள்ளது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

தவறு

question 6

i. எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி ‘பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து’. ii. இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது. iii. சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது. iv. சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

  • Option A: (i) மற்றும் (ii) சரி
  • Option B: (ii) மற்றும் (iv) சரி
  • Option C: (iii) மற்றும் (iv) சரி
  • Option D: (i), (ii) மற்றும் (iii) சரி

answer

(ii) மற்றும் (iv) சரி

question 7

கூற்று இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவற்றனர். காரணம் பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பளராகவும் முடிவற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.

  • Option A: கூற்று சரி காரணம் கூற்றுக்கான விளக்கம்
  • Option B: கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
  • Option C: கூற்றும் காரணமும் சரி
  • Option D: கூற்றும் காரணமும் தவறானவை

answer

கூற்றும் காரணமும் சரி

question 8

பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாது ஒன்று எது?

  • Option A: பெர்னியர் - ஷாஜகான்
  • Option B: பருத்தி ஆலை - அகமதாபாத்
  • Option C: TISCO - ஜாம்ஜெட்பூர்
  • Option D: பொருளாதார தாரளமயமாக்கல் - 1980

answer

பொருளாதார தாரளமயமாக்கல் - 1980

question 9

பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாது ஒன்று எது?

  • Option A: பாலிகன்ஜ் - காகித ஆலை
  • Option B: டவேர்னியர் - ஜப்பான் பயணி
  • Option C: தாதாபாய்நௌரோஜி - செல்வச் சுரண்டல் கோட்பாடு
  • Option D: டாக்கா - மஸ்லின் துணி

answer

டவேர்னியர் - ஜப்பான் பயணி

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 10

    இந்தியாவில் 1854 ஆம் ஆண்டில் பருத்தி ஆலை எங்கு தொடங்கப்பட்டது?

    • Option A: சென்னை
    • Option B: பம்பாய்
    • Option C: கர்நாடக
    • Option D: கொல்கத்தா

    answer

    பம்பாய்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}