tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். -- ஸ்டீலி

அலகு 3 - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும், 9th standard unit 3 history in Tamil

கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்ப் பண்பாடு தோன்றிவிட்டது. தமிழகத்து வணிகர்களும் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். வெளிநாட்டு வணிகர்கள் கடல்வழியே தமிழகத்திற்கு வந்துபோயினர். வெளிநாட்டினருடன் ஏற்பட்ட பண்பாட்டுத் தொடர்புகளும், வணிக நடவடிக்கைகளும், தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் நகரமயமாதல் உருவானது. தலைநகரங்களும் துறைமுகப்பட்டிணங்களும் தோன்றின. நாணயங்களும் பணமும் புழக்கத்திற்கு வந்தன. 'தமிழ் பிராமி' என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்டது. ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. செம்மொழித் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்! நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தால், தவறாமல் கீழே உள்ள கமெண்ட் -இல் தெரிவிக்கலாம். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். அலகு 3 - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும், 9th standard unit 3 history in Tamil, for UPSC, TNPSC unit 8, SSC, RRB, TRB, tet, net

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 1

  ஸங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

  • Option A: ஆங்கிலம்
  • Option B: தேவநாகரி
  • Option C: தமிழ் – பிராமி
  • Option D: கிரந்தம்

  answer

  தமிழ் – பிராமி

  question 2

  தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

  • Option A: தீபவம்சம்
  • Option B: அர்த்தசாஸ்திரம்
  • Option C: மகாவம்சம்
  • Option D: இண்டிகா

  answer

  மகாவம்சம்

  question 3

  காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

  • Option A: கரிகாலன்
  • Option B: முதலாம் இராஜராஜன்
  • Option C: குலோத்துங்கன்
  • Option D: முதலாம் இராஜேந்திரன்

  answer

  கரிகாலன்

  question 4

  சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

  • Option A: புகளூர்
  • Option B: கிர்நார்
  • Option C: புலிமான்கோம்பை
  • Option D: மதுரை

  answer

  புகளூர்

  question 5

  i. பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் இடைக்கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ii. மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள். iii. ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ், முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது. iv. தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக் குறித்தகருத்து இடம்பெற்றுள்ளது.

  • Option A: (i) மற்றும் (ii) சரி
  • Option B: (ii) சரி
  • Option C: (ii) மற்றும் (iii) சரி
  • Option D: (iii) மற்றும் (iv) சரி

  answer

  (i) மற்றும் (ii) சரி

  question 6

  i. பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது. ii. காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது. iii. சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள். iv. நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.

  • Option A: (i) சரி
  • Option B: (i) மற்றும் (ii) சரி
  • Option C: (iii) சரி
  • Option D: (iv) சரி

  answer

  (iii) சரி

  question 7

  மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல்?

  • Option A: மேகதூதம்
  • Option B: ஆரிய பட்டம்
  • Option C: காமசூத்திரம்
  • Option D: அர்த்தசாஸ்திரம்

  answer

  அர்த்தசாஸ்திரம்

  question 8

  8. கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை குரிக்கும் சொல்?

  • Option A: யவனர்கள்
  • Option B: ஆரியர்கள்
  • Option C: அரேபியர்கள்
  • Option D: கிரேக்கர்கள்

  answer

  யவனர்கள்

  question 9

  சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  • Option A: அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • Option B: ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளூஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது.
  • Option C: இ) இந்தியாவில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன; நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
  • Option D: ஈ) சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.

  answer

  அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

  question 10

  சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  • Option A: அ) சேரர்கள்காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
  • Option B: ஆ) மாங்குளம் தமிழ் - பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.
  • Option C: இ) தமிழ் - பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
  • Option D: ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்: அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.

  answer

  இ) தமிழ் - பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}