tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

அலகு 2 - வானிலை மற்றும் காலநிலை 8th social science geography part 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: காலநிலை இயற்கைச் சூழ்நிலையின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும். இது நிலத்தோற்றம், மண்வகைகள், இயற்கைத் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில், மே மாதம், யுக்தா தன்னுடைய விடுமுறையை தம்பியுடனும், குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்றாள். அவள் எப்பொழுதும் பருத்தியால் ஆன உடையை அணிகிறாள். அவளுடைய அம்மா கோடைக்காலத்தில் ஏற்ற உணவான கஞ்சி, நீர்மோர், எலுமிச்சைசாறு, தர்பூசணி போன்றவற்றைத் தன் குழந்தைக்கு வழங்குகின்றனர். புவியின் வளிமண்டலமானது வாயுக்களால் ஆன பல அடுக்குகளைக் கொண்டதாகும். இது புவியைச் சூழ்ந்துள்ளது. புவியின் ஈர்ப்பு விசையினாள் வாயுக்களைப் புவியில் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 78 சதவீதம், நைட்ரஜனும், 21 சதவீதம் ஆக்ஸிஜனும், 0.9சதவீதம் ஆர்கானும், 0.03சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடும் 0.04 சதவீதம் மற்ற வாயுக்களும் மற்றும் நீராவியும் உள்ளன. அதே மே மாதத்தில் தியா என்பவர் நியூசிலாந்து நாட்டில் உள்ள நியூசிலாந்து என்னும் நகரத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர்கள் மேல்சட்டை வன்துணியாடை கையுறை, காலுறை போன்ற ஆடைகளை அணிந்துள்ளார். அவருடைய அம்மா அவருக்கு சாண்ட்விச், ஓட்ஸ் உணவு, வஞ்சிரமீன் வடிசாறு போன்ற சூடான உணவு வகைகளை அளிக்கிறார். யுக்தா கிருஸ்துமஸ் விழாவை குளிர்காலத்திலும், தியா கிருஸ்துமஸ் விழாவை கோடைக்காலத்திலும் கொண்டாடுகின்றனர். காரணம் என்ன என்று சிந்தனை செய்வீர்களா? யுக்தா, தியா இருவரும் வெவ்வேறான அரைக் கோளத்தில் வெவ்வேறு வகையான வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றனர். கண்டறிக சூரியக் குடும்பத்திலுள்ள எல்ல கோள்களுக்கும் வளிமண்டலம் உள்ளதா?இதற்கு அவ்விடங்களின் வெவ்வேறான வானிலையே காரணமாகும்.‘வானிலையும் காலநிலையும் மனிதனுடைய செயல்பாடுகள், உணவு வகைகள், ஆடைமுறைகள், வசிக்கும் வீடு, செய்யும் தொழில்கள், வேளாண்மை, கடல் பயணம், மீன் பிடித்தல் நவீன போக்குவரத்து மற்றும் நாம் விளையாடும் நேரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஒவ்வொருவரும் வானிலை மற்றும் காலநிலைப் பற்றிய அறிவை பெற்றிருக்கவேண்டும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science geography, அலகு 2 - வானிலை மற்றும் காலநிலை பகுதி 2, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு,,,,,,,,,,,,,,

 • Option 1: நடு மையக்கோடு
 • Option 2: சம குளிர்
 • Option 3: சமவெப்பம்
 • Option 4: சம அளவற்ற குளிர்

answer

சமவெப்பம்

question 2

சூரிய கதிர் வீச்சுகளில் இருந்து பெறப்படும் வெப்ப ஆற்றல் எத்தனை வழிமுறைகளில் புவிக்கு வந்தடைகிறது?

 • Option 1: மூன்று வழிகளில்
 • Option 2: இரண்டு வழிகளில்
 • Option 3: ஒரு வழியில்
 • Option 4: ஐந்து வழிகளில்

answer

மூன்று வழிகளில்

question 3

.....என்பது வானிலை மற்றும் காலநிலை யின் முக்கிய கூறு ஆகும்.

 • Option 1: காலநிலை
 • Option 2: சூழ்நிலை
 • Option 3: பருவம்
 • Option 4: வெப்பம்

answer

வெப்பம்

question 4

புவி ------வெப்ப மண்டலங்களாக பிரிக்கப் படுகிறது.

 • Option 1: ஐந்து
 • Option 2: மூன்று
 • Option 3: ஒன்று
 • Option 4: இரண்டு

answer

மூன்று

question 5

அதிக காற்றழுத்த மண்டலத்தை ----என்ற எழுத்தால் வரைபடத்தில் குறிப்பிடப்படுகிறது.

 • Option 1: L
 • Option 2: M
 • Option 3: N
 • Option 4: K

answer

L

question 6

சரியாக பொருந்தாதவற்றை தேர்ந்தெடுக்கவும்?

 • Option 1: காலநிலை - நீண்ட நாளைய மாற்றங்கள்
 • Option 2: ஈரநிலைமானி - ஈரப்பதம்
 • Option 3: ஐசோநிப் - சம அளவற்ற பனிபொழிவு
 • Option 4: ரேடார் - பு ய லி ன் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது

answer

ஐசோநிப் - சம அளவற்ற பனிபொழிவு

question 7

வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு..........

 • Option 1: வளியியல்
 • Option 2: வானிலை ஆய்வு
 • Option 3: வல்கனாலஜி
 • Option 4: சைலோகிராபி

answer

வளியியல்

question 8

புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம்...............

 • Option 1: நியூசிலாந்து
 • Option 2: தாய்லாந்து
 • Option 3: பின்லாந்து
 • Option 4: கிரீன்லாந்து

answer

கிரீன்லாந்து

question 9

காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ள்ளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம்..................

 • Option 1: பருவம்
 • Option 2: வெப்பம்
 • Option 3: ஒப்பு ஈரப்பதம்
 • Option 4: நடு மையக்கோடு

answer

ஒப்பு ஈரப்பதம்

question 10

அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் ................. .மற்றும் ............... ஆகியவை அளக்கப்படுகிறது.

 • Option 1: காற்றின் வேகம், காற்றின் திசை
 • Option 2: காற்றின் அழுத்தம், காற்றின் திசை
 • Option 3: காற்றின் அடர்த்தி, காற்றின் சுழல்
 • Option 4: காற்றின் ஈரப்பதம், காற்றின் வரட்சி

answer

காற்றின் வேகம், காற்றின் திசை

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: புவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}