tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

அலகு 2 - வானிலை மற்றும் காலநிலை 8th social science geography part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: காலநிலை இயற்கைச் சூழ்நிலையின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும். இது நிலத்தோற்றம், மண்வகைகள், இயற்கைத் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில், மே மாதம், யுக்தா தன்னுடைய விடுமுறையை தம்பியுடனும், குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்றாள். அவள் எப்பொழுதும் பருத்தியால் ஆன உடையை அணிகிறாள். அவளுடைய அம்மா கோடைக்காலத்தில் ஏற்ற உணவான கஞ்சி, நீர்மோர், எலுமிச்சைசாறு, தர்பூசணி போன்றவற்றைத் தன் குழந்தைக்கு வழங்குகின்றனர். புவியின் வளிமண்டலமானது வாயுக்களால் ஆன பல அடுக்குகளைக் கொண்டதாகும். இது புவியைச் சூழ்ந்துள்ளது. புவியின் ஈர்ப்பு விசையினாள் வாயுக்களைப் புவியில் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 78 சதவீதம், நைட்ரஜனும், 21 சதவீதம் ஆக்ஸிஜனும், 0.9சதவீதம் ஆர்கானும், 0.03சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடும் 0.04 சதவீதம் மற்ற வாயுக்களும் மற்றும் நீராவியும் உள்ளன. அதே மே மாதத்தில் தியா என்பவர் நியூசிலாந்து நாட்டில் உள்ள நியூசிலாந்து என்னும் நகரத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர்கள் மேல்சட்டை வன்துணியாடை கையுறை, காலுறை போன்ற ஆடைகளை அணிந்துள்ளார். அவருடைய அம்மா அவருக்கு சாண்ட்விச், ஓட்ஸ் உணவு, வஞ்சிரமீன் வடிசாறு போன்ற சூடான உணவு வகைகளை அளிக்கிறார். யுக்தா கிருஸ்துமஸ் விழாவை குளிர்காலத்திலும், தியா கிருஸ்துமஸ் விழாவை கோடைக்காலத்திலும் கொண்டாடுகின்றனர். காரணம் என்ன என்று சிந்தனை செய்வீர்களா? யுக்தா, தியா இருவரும் வெவ்வேறான அரைக் கோளத்தில் வெவ்வேறு வகையான வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றனர். கண்டறிக சூரியக் குடும்பத்திலுள்ள எல்ல கோள்களுக்கும் வளிமண்டலம் உள்ளதா?இதற்கு அவ்விடங்களின் வெவ்வேறான வானிலையே காரணமாகும்.‘வானிலையும் காலநிலையும் மனிதனுடைய செயல்பாடுகள், உணவு வகைகள், ஆடைமுறைகள், வசிக்கும் வீடு, செய்யும் தொழில்கள், வேளாண்மை, கடல் பயணம், மீன் பிடித்தல் நவீன போக்குவரத்து மற்றும் நாம் விளையாடும் நேரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஒவ்வொருவரும் வானிலை மற்றும் காலநிலைப் பற்றிய அறிவை பெற்றிருக்கவேண்டும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science geography, அலகு 2 - வானிலை மற்றும் காலநிலை பகுதி 1, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

புவியின் வளிமண்டலம் ..............நைட்ரஜன் மற்றும் ............ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.

  • Option A: 78% மற்றும் 21%
  • Option B: 22% மற்றும் 1%
  • Option C: 21% மற்றும் 0.97%
  • Option D: 10 மற்றும் 20%

answer

78% மற்றும் 21%

question 2

.............ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

  • Option A: புவி
  • Option B: வளிமண்டலம்
  • Option C: காலநிலை
  • Option D: சூரியன்

answer

காலநிலை

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 3

    புவி பெறும் ஆற்றல்...........

    • Option A: நீரோட்டம்
    • Option B: மின்காந்த அலைகள்
    • Option C: அலைகள்
    • Option D: வெப்பம்

    answer

    வெப்பம்

    question 4

    கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

    • Option A: சமவெப்பக்கோடு
    • Option B: சம சூரிய வெளிச்சம் கோடு
    • Option C: சம காற்றழுத்தக் கோடு
    • Option D: சம மழையளவுக் கோடு

    answer

    சம மழையளவுக் கோடு

    question 5

    ................என்ற கருவி ஈரப்பத்தை அளக்கப் பயன்படுகிறது.

    • Option A: காற்றுமானி
    • Option B: அழுத்த மானி
    • Option C: ஈரநிலை மானி
    • Option D: வெப்பமானி

    answer

    ஈரநிலை மானி

    question 6

    புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.

    • Option A: சரி
    • Option B: ___
    • Option C: தவறு
    • Option D: ___

    answer

    சரி

    question 7

    வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.

    • Option A: சரி
    • Option B: ___
    • Option C: தவறு
    • Option D: ___

    answer

    தவறு

    question 8

    சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.

    • Option A: சரி
    • Option B: ___
    • Option C: தவறு
    • Option D: ___

    answer

    தவறு

    question 9

    ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி

    • Option A: சரி
    • Option B: ___
    • Option C: தவறு
    • Option D: ___

    answer

    தவறு

    question 10

    ...............என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.

    • Option A: பருவம்
    • Option B: வானிலை
    • Option C: காலம்
    • Option D: சூழ்நிலை

    answer

    வானிலை

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}