tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. -- காந்தியடிகள்

அலகு 1 - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும், 9th standard history lesson 1 in Tamil

நாம் தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கிறோம். அலைபேசிகளால் இன்று உலகம் உண்மையிலேயே நமது விரலில் இருக்கிறது. இன்று நம்மிடம் இருக்கும் அனைத்து அறிவுத் திரட்சியும் திடீரென்று தோன்றிவிடவில்லை. இந்த நவீன வாழ்விற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இடப்பட்டு, நமது முன்னோர்களின் அறிவாற்றலால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதாகும். தொல்பழங்கால மக்கள் மானுடப் படைப்பாற்றலின் முன்னோடிகள். அவர்கள் உருவாக்கிய செய்பொருட்கள், மொழிகள் ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்! நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தால், தவறாமல் கீழே உள்ள கமெண்ட் -இல் தெரிவிக்கலாம். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். அலகு 1 - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம், 9th standard history lesson 1 in Tamil, for UPSC, TNPSC unit 8, SSC, RRB, TRB, tet, net

Go to quiz

question 1

மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது?

 • Option A: கொரில்லா
 • Option B: சிம்பன்ஸி
 • Option C: உராங் உட்டான்
 • Option D: பெருங்குரங்கு

answer

சிம்பன்ஸி

question 2

வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்?

 • Option A: பழைய கற்காலம்
 • Option B: இடைக்கற்காலம்
 • Option C: புதிய கற்காலம்
 • Option D: பெருங்கற்காலம்

answer

புதிய கற்காலம்

question 3

பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் இவர்கள் ஆவர்.

 • Option A: ஹோமோ ஹேபிலிஸ்
 • Option B: ஹோமோ எரக்டஸ்
 • Option C: வோமோ சேபியன்ஸ்
 • Option D: நியாண்டர்தால் மனிதன்

answer

வோமோ சேபியன்ஸ்

question 4

எகிப்து, இஸ்ரேல் - பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

 • Option A: கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
 • Option B: பிறைநிலப் பகுதி
 • Option C: ஸோலோ ஆறு
 • Option D: நியாண்டர் பள்ளத்தாக்கு

answer

பிறைநிலப் பகுதி

question 5

சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் இக்காலத்தைச் சேர்ந்த கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.

 • Option A: நுண்கற்காலம்
 • Option B: பழங்கற்காலம்
 • Option C: இடைக் கற்காலம்
 • Option D: புதிய கற்காலம்

answer

பழங்கற்காலம்

question 6

i. எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும். ii. வரலாற்றுக்கு முந்தைய மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள். iii. வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன. iv. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.

 • Option A: (i) சரி
 • Option B: (i) மற்றும் (ii) சரி
 • Option C: (i) மற்றும் (iv) சரி
 • Option D: (i) மற்றும் (iii) சரி

answer

(i) மற்றும் (ii) சரி

question 7

i. செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள். ii. புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது. iii. புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது. iv. விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.

 • Option A: (i) சரி
 • Option B: (ii) சரி)
 • Option C: (ii) மற்றும் (iii) சரி
 • Option D: (iv) சரி

answer

(i) சரி

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 8

  கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.

  • Option A: கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
  • Option B: கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
  • Option C: கூற்று சரி, காரணம் தவறு.
  • Option D: கூற்றும் காரணமும் தவறானவை.

  answer

  கூற்றும் காரணமும் தவறானவை.

  question 9

  கை கோடரிகளும் வெட்டுக் கருவிகளும் இக்கால பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்.

  • Option A: பழங்கற்காலம்
  • Option B: இடைக் கற்காலம்
  • Option C: புதிய கற்காலம்
  • Option D: செம்பு கற்காலம்

  answer

  பழங்கற்காலம்

  question 10

  பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம்

  • Option A: செம்பு கற்காலம்
  • Option B: இரும்பு கற்காலம்
  • Option C: இடை கற்காலம்
  • Option D: பெருங்கற்காலம்

  answer

  இடை கற்காலம்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  popular quizzes

  {{message}}