
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
ஒரு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடிகின்றது என்பதைவிட அந்தக் கேள்விகளுக்கு எவ்வளவு விரைவாக பதிலளிக்க முடிகின்றது என்பது மிகவும் முக்கியம். ராப் பகலா கண் விழித்து படித்து இறுதியில் நேர பற்றாக்குறையினால் தெரிந்த கேள்விகளுக்கு விடை அளிக்காமல் வரும் சூழ்நிலை இனி இல்லை. நமது தேர்வில் உங்களின் வசதிக்காக மிகச்சிறந்த ஒரு நேர கடிகாரத்தை வழங்கியுள்ளோம். ஆண்டுக்கு ஆண்டு போட்டி அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் நாம் வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டால் தேர்வில் வெற்றி நிச்சயம் எனவே மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யுங்கள். அதிவிரைவு. விரைவு, இயல்பான வேகம் என்ற மூன்று வகையான நேரங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.
தமிழகத்தில் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் மெட்டீரியல் சொற்ப அளவிலேயே உள்ளது. குறிப்பாக இணையத்தில் பழைய தேர்வுத் தாள்களும் ஒரு சில மாதிரி வினாத்தாள்களும் தான் தமிழ் மாணவர்களுக்கு கிடைக்கின்ற பயிற்சி கருவிகள். இதனாலேயே தமிழ் மாணவர்களுக்கு வேலை என்பது எட்டா கனியாகவே இருக்கிறது இந்த நிலையை மாற்றுவதற்காகவே வருகிறது tamiltutor.in. ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வகையான tnpsc, group 1, group 2, group 4, IBPS, RRB, TET முதலிய மெட்டீரியல்களும் தமிழக போட்டி தேர்வர்களுக்கு மிக எளிதாக கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். தற்போது கிடைக்கின்ற அனைத்து பயிற்சி மெட்டீரியல்களையும் எளிய தமிழில் எடுத்து வருகின்றோம்.
பயிற்சிகளே வெற்றிக்கான படிக்கட்டுகள்! உங்களின் பயிற்சிக்காக அதிநவீன அதிவிரைவான மிகச்சிறந்த பயிற்சிக் களத்தை அறிமுகம் செய்கிறது தமிழ் ட்யுட்டர். படித்த பாடங்களை பயிற்சி செய்து பார்ப்பதற்கு சரியான தளத்தை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் நீங்கள் சரியான இடத்தை தான் வந்தடைந்துள்ளீர்கள்! உங்களின் பயிற்சிக்காக ஆன்லைன் தேர்வுகளில் உள்ள அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய அதிநவீன தேர்வு முறையை அறிமுகம் செய்கின்றோம் நாங்கள். உச்சகட்டமாக எத்தனை நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வை உங்களால் எழுதி முடிக்க முடிகின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு நேர கடிகாரம், நீங்கள் எழுதிய தேர்வை மதிப்பீடு செய்து கொள்வதற்கான தகவல்கள் என எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளது நமது பத்து நிமிட பயிற்சிதேர்வு. மேலும் இந்தப் பயிற்சி தேர்வுகள் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் தங்களது பயிற்சியை மதிப்பிடுவதற்காக முந்தைய ஆண்டுகளின் தேர்வுத்தாள் களோடு ஒப்பிட்டு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை தொகுத்தும் தேர்வில் கேட்க அதிக வாய்ப்பு இருக்கும் கேள்விகளையும் பயிற்சி கேள்விகளாக தந்துள்ளோம் இவை பொதுவாக ஒரு தலைப்பில் இருந்து எடுக்கப்படவில்லை. மாறாக ஒரு குறிப்பிட்ட பாடத்தில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளன. அதாவது அரசியல் அறிவியல் என்று பொதுவாக இல்லாமல் அடிப்படை கடமைகள், மத்திய மாநில உறவுகள் என ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாடத்தை படித்து முடித்த பிறகும் நமது தளத்தில் வந்து பயிற்சி செய்து பார்க்கலாம். இதன் மூலமாக அந்த பாடத்தை நீங்கள் எந்த அளவிற்கு புரிந்து கொண்டு படித்து உள்ளீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
முயற்சி திருவினையாக்கும் என்பது வெற்றுச் சொல் அல்ல அது ஒரு வெற்றி சொல். முயற்சியாளர்கள் ஆக இருந்து வெற்றியாளர்களாக மாறியவர்களின் உள்ளத்தை உறுதி பெறச் செய்த உயிர் சொல் அது. தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? ஏதோ பிறந்து விட்டோம் நாம் உயிர்வாழ உணவு தேவை என உணவுக்காக தேடி அலைந்து திரிந்து , பொழுது போகாமல் வெறும் கதைகளை பேசி காலம் கழித்து , நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என நிகழ்வுகளால் மனம் நொந்து, நாமே நன்றாக இல்லை பிறர் மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என பிறருக்கு தீங்கான செயல்கள் செய்து, வழக்கம் போல நரை விழுந்து இறக்கும் பேதை மனிதர்களைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று பாரதியார் கேட்கிறார் இதன் மூலமாக நாம் மற்றவரை காட்டிலும் ஒரு படி சிறப்பாகவே இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறார் நீங்கள் எப்பொழுது எல்லாம் சோர்வாக உணர்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் இந்த பாடலை படித்து பாருங்கள்
போட்டித் தேர்வுகளில் கணிதத்தில் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று விருப்பப் படுபவர்களா நீங்கள்? உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற வருகிறது math circle. TNPSC, IBPS RRB போன்ற அனைத்து தேர்வுகளில் கேட்கும் கேள்விகளுக்கு சில வினாடிகளில் உங்களை விடை அளிக்க செய்யும் மிக எளிய டுதொரியல். எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் மல்டிமீடியா விளக்கங்கள் என எக்கச்சக்கமான கணித மெட்டீரியல்களை உங்களுக்கு கொண்டு வருகின்றோம். உங்களுக்கு தேவையான விளக்கங்களை தருவதோடு நின்றுவிடாமல் தினமும் நீங்கள் பயிற்சி செய்வதற்கும் வழி செய்கிறது நமது math circle. தினமும் பயிற்சி செய்வதோடு மட்டும் இல்லை முழுவதாக 3 மணி நேரம் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை போன்று கேள்விகளோடு ஒவ்வொரு வாரமும் நீங்கள் பயிற்சி செய்துகொள்ளலாம். சவால் இல்லாமல் சுவாரஸ்யம் இருக்கும் என்று நம்புகிறீர்களா? நிச்சயமாக ஏதாவது சவால் இருந்தால்தான் வெற்றி சுவைக்கும் என்பதால் உங்கள் கற்றல் அனுபவத்தில் உங்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக ஒவ்வொரு பாடத்திலும் நீங்கள் தாண்ட வேண்டிய தடைகளை ஆங்காங்கே அள்ளித் தெளித்து உள்ளோம். இந்த டுடோரியலை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு உள்ள ஆர்வத்தை விட, மகிழ்ச்சியை விட அதை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
படித்தது அனைத்தும், பயிற்சி இல்லாத பொழுது தான், பயனற்றுப் போகிறது. எனவே இப்பொழுதே பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி அடையுங்கள்!
All quizzes!